Tamil version of Chilli Disease

From WikiEducator
Jump to: navigation, search


English Version


களுதாவளை, களுவாஞ்சிக்குடி கிராமங்களில் மிளகாய் ஒரு பிரதான பயிராகப் பயிர்செய்யப்படுகின்றது.


அங்கிருக்கும் விவசாயிகள் மிளகாய் உற்பத்தியில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.


அவற்றுள் நோய்ப் பீடைப் பிரச்சனை பிரதானமானதாகும்.


நோய்களுள் அந்திரக்னோஸ் மிளகாய் உற்பத்தியைப் பாதித்து விளைச்சலைக் குறைத்து சந்தை வாய்ப்பைப் பாதிக்கும் ஒரு பிரதான நோயாகக் காணப்படுகின்றது. இந்த நோய் காய்களையும், பழங்களையும் தாக்கி அவற்றின் தரத்தைக் குறைத்து சந்தை வாய்ப்பைக் குறைக்கின்றது. இந்த நோயை விவசாயிகள் “அம்மை நோய்” என்றும் கூறுவார்கள்.


கள உத்தியோகஸ்தர்: இலங்கையில் விருத்தி செய்யப்பட்ட மிளகாய் இனங்களை இப்பொழுது இங்கு பார்ப்போம்.


MI-1
MI-2
KA-2
MI-Arunalu
MI-hot


விவசாயி: எவ்வளவு அருமையாக உள்ளன. நாமும் இதே போல் மிளகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும்.


விவசாயி: ஐயா/அம்மா களுதாவளையிலும் களுவாஞ்சிக்குடியிலும் இப்பொழுது மிளகாய்களில் ‘அந்திரக்னோஸ்’ (அம்மை) நோய் மிகவும் தீவிரமான ஒரு நோய்ப் பிரச்சனை. இதற்கு எவ்வாறு உடனடியாகத் தீர்வு காணலாம்?


கள உத்தியோகஸ்தர்: சரி ஐயாமார்களே இந்த நோயின் அறிகுறிகளை அவதானியுங்கள். இப்படத்தில் காணப்படுவது போல் காய்களிலும் பழங்களிலும் நீர்த் தன்மையான, மோதிர வடிவான, பதிந்து காணப்படும் அமைப்புக்களை மிளகாய்களில் அவதானிக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் உங்கள் மிளகாய்த் தோட்டங்களில் காணப்படுகின்றதா?


AnthracnoseAnthracnose



விவசாயி: இந்த நோய்க்கு எவ்வாறு தீர்வு காணலாம்?


கள உத்தியோகஸ்தர்: இங்கு காணப்படும் பயிர் முகாமைத்துவ பயிற்சிகளை எல்லோரும் கவனமாகப் பாருங்கள்,


1. பாதிப்பற்ற, தூய்மையான, சிறந்த தரமான உறுதிப்படுத்தப்பட்ட விதைகளை அல்லது நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.


2. விதைகளை பங்கசு நாசினிகளுடன் கலந்து உபயோகிக்க வேண்டும்.


3. நோய்ப்பாதிப்புக்குள்ளான தாவரங்களை, தாவர மீதிகளை களத்திலிருந்து அகற்றி விட வேண்டும்.


4. ஒரே வகையான தாவர வகைகளைத் தெரடர்ந்து பயிரிடாமல் மாற்றி மாற்றி பயிரிட வேண்டும்.


5. சரியான நேரத்தில் நாற்றுக்கள் நடப்பட வேண்டும்.


6. நாற்றுக்களை நெருக்கமாக பயிரி;டாமல் சரியான நடுகை இடைவெளியில் பயிரிட வேண்டும்.


மேற்குறிப்பிபட்ட பயிற்சிகளை கைக்கொண்டால் இந்நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம் அல்லது நோயைத் தடுக்கலாம்.


விவசாயி: பெரியவரே நோய்த்தாக்கம் தீவிரமாக இருந்தால் இரசாயனக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாமா?


கள உத்தியோகஸ்தர்: ஆம் நண்பரே இது ஒரு சிறந்த யோசனை. இரசாயனக் கட்டுப்பாட்டிற்காக பின்வரும் பங்கசு நாசினியைப் பயன்படுத்தலாம்.


20g ‘மங்கோசெப் 80% ஐ 10 லீற்றர் தண்ணீரில் நன்கு கரைத்து பாதிக்கப்பட்ட தாவரம் முழுதாக நனையும் வரை தெளிக்க வேண்டும்.


கீழுள்ள படத்தைப் பாருங்கள்.


Diagram2.JPG



(விவசாயி மேற்கூறியபடி பங்கசு நாசினியை தெளித்து இரண்டு வாரங்களில் மிளகாய் செடிகளை கவனமாகப் பார்வையிட்டு இந்த நோய் கட்டுப்பட்டதை அவதானிக்கிறார்)


Farmer.jpg


விவசாயி: ஹா....ஹா......ஹா.....எனக்கு இப்பொழுது நல்ல சந்தோ~மாக உள்ளது